தேவனின் வழிகள்!

நீ எதிர்பார்க்கும் விதத்தில் காரியங்கள் நடக்காவிட்டால் சோர்ந்து போகாதே....


உன்னுடைய திட்டத்தின்படி தேவன் கிரியை செய்வார் என்று எதிர்பார்க்காதே...


அவர் நினைவுகள் உன் நினைவுகளுக்கு அப்பாற்பட்டது.....


அவர் வழிகள் உன் வழிகளை காட்டிலும் உயர்ந்தவை....


இந்த உலகத்தில் அவரால் செய்யக் கூடாதது என்று ஒன்றுமே இல்லை.....


அவர் ஒன்றே செய்வார் என்றால் ஒரு பெரிய நோக்கத்தோடுதான் செய்வார்.....


அவர் வழிகளை கேள்வி கேட்காதே!


"ஏன் ஆண்டவரே?"என்று கேட்காமல் ஒப்புக் கொடு!


ஏசாயா 55:9


பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது


எல்லாம் அறிந்த ஆண்டவர் உனக்கு உண்டு! அவர் எதையும் நோக்கத்தோடுதான் செய்வார்!! நீ இருக்கிற இடத்தில் அவரைத் துதி நீ சரியான இடத்தில் சரியான ஸ்தானத்தில் தான் இருக்கிறாய்!!!


2 views

Recent Posts

See All
hop church logo.jpg