நீங்கள் யாரைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறீர்கள்?
உங்களைச் சுற்றியுள்ளவர்களால் நீங்கள் ஏளனம் செய்யப்படுகிறீர்களா?
உங்கள் செயல்களுக்காக நீங்கள் நியாயம் தீர்க்கப்படுகிறீர்களா?
உங்கள் ஒவ்வொரு சரியான நடவடிக்கைக்கும் கேள்வி எழுப்பப்படுகிறதா?
நீங்கள் நடிக்கிறீர்கள் என்று பிறர் சொல்கிறார்களா?
நீங்கள் நல்லது செய்யும்போது, அது கவனிக்கப்படாமல் விடப்படுகிறதா?
உங்கள் நல்ல செயல்களை மற்றவர் பாராட்ட தவறிவிடுகிறார்களா?
அதனால் என்ன? நீங்கள் யாரைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறீர்கள்?
ஆண்டவருடைய பாராட்டுச் சான்றிதழை நீங்கள் விரும்பினால், மக்களின் கருத்துகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் ....
அவரை மட்டும் மகிழ்விக்க வாழுங்கள் !!!
மத்தேயு 3: 17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
என்னைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஆண்டவர் எப்படி உணருகிறார் என்பதே முக்கியம்! முழு உலகின் ஆதரவு எனக்கு கிடைத்தாலும், தேவன் விரும்பாததை நான் செய்ய மாட்டேன்! லட்சக்கனக்கானோரின் கைதட்டலைக் காட்டிலும் ஆண்டவரை பிரியப் படுத்துவது மிகவும் முக்கியமானது !!!


Comentários