தேவன் யுத்தம் செய்வார்
- HOP Church
- Oct 29, 2020
- 1 min read
தேவன் உனக்காக யுத்தம் செய்வார்!
விடுதலையாக்கும் அவர் கரங்களின் வல்லமையை நீ கண்டு இருக்கிறாய்.....
அவருடைய பாதுகாக்கும் கரங்களை நீ பார்த்திருக்கிறாய்....
அவருடைய அன்பின் தொடுதலை அனுபவித்து இருக்கிறாய்.....
அவர் எப்படி போஷிப்பார் என்பதை அறிந்து இருக்கிறாய்....
இதுவரை எப்படி உன்னை சுமந்து வந்தார் என்பதை அறிந்து இருக்கிறாய்...
அவர் யுத்தத்தை செய்யும்போது சத்துருவுக்கு ஒன்றுமே விளங்காது....
அவருடன் பட்சத்தில் இருக்கும்போது வெற்றி உன்னுடையது!
உபாகமம் 1:30
உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், வனாந்தரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்
அவருடைய கரத்தின் அற்புதங்களை கண்ட பின்பும் உன்னால் எப்படி அவரை சந்தேகிக்க முடியும்? அவர் வார்த்தையை நம்பு!! அவர் உனக்காக யுத்தம் செய்வார் - நீ இந்த பள்ளத்தாக்கையும் கடந்து செல்வாய்!!!


Comments