உன் வாழ்வில் தேவனுடைய வார்த்தையின் பங்கு என்ன?
ஆறுதல் தேவைப்படும்போது மட்டும் வாசிக்கின்றாயா?
ஒரு ஆவிக்குரிய கடமையாக வாசிக்கின்றாயா?
வேத வார்த்தை உன் இருதயத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதா?
தேவ வார்த்தையால் வழிநடத்தப்பட உன்னை ஒப்புக் கொடுக்கிறாயா?
தேவ சித்தத்தை அறிந்து கொள்ள அவர் வார்த்தைக்காக காத்து இருக்கிறாயா?
அது உன் வாயில் இருக்கிறதா?
வேத வார்த்தை உன் வாயை விட்டு பிரியாமல் இருக்கட்டும் என்று தேவன் சொல்லுகிறார்!
யோசுவா 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்
வேத வார்த்தையின் அடிப்படையில் உன் வாழ்க்கை கட்டப்படும்! தேவ வார்த்தையோடு ஒரு உறுதியான உறவை ஏற்படுத்திக் கொள்!! வேத வார்த்தையை வாசி - நேசி - விசுவாசி!!!
Comments