நன்றி உணர்வு

நன்றி உணர்வு ஒரு நல்ல மனப்பான்மை!


நன்றி உணர்வு இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் புலம்பிக் கொண்டு இருப்பாய்....


நன்றி உணர்வு இல்லை என்றால் பெற்ற ஆசீர்வாதங்களை மறந்து பதில் அளிக்கப்படாத ஜெபங்களை எண்ணிக்கொண்டு இருப்பாய்.....


நன்றி உணர்வு இல்லை என்றால் தேவனோடு உள்ள உறவில் குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் இருப்பாய்.....


நன்றி உணர்வு இல்லை என்றால் துதிப்பதையும் ஆராதிப்பதையும் நிறுத்திவிடுவாய்....


நன்றி உணர்வு இல்லை என்றால் முழுமனதோடு அவருக்கு நன்றி சொல்ல உனக்கு நேரம் இருக்காது....


நன்றி உணர்வு இல்லை என்றால் உன்னால் உயர பறக்கவே முடியாது....


உன் மனப்பான்மை உன் தெரிந்தெடுப்பு!


1 சாமுவேல் 7 : 12


அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.


நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் எபினேசரை வந்து சேர வேண்டும்! தேவனுக்கு நன்றி சொல்ல அனேக காரியங்கள் உண்டு!! இன்று நீ எதற்காக நன்றியுணர்வுடன் இருக்கிறாய்? - நன்றி உணர்வு உன் மனப்பான்மையாக இருக்கட்டும்!!!


5 views

Recent Posts

See All
hop church logo.jpg