ஆகோரின் பள்ளத்தாக்கு - அது நினைவில் கொள்ளவேண்டிய ஒரு இடம் அல்ல!
அவர்கள் எதிரிகளுக்கு முன் தோற்றுப் போனதற்கு அடையாளமாகவே அவ்விடம் இருந்தது....
அவர்களுக்கு வெட்கத்தை உண்டு பண்ணின பாவம் பாளையத்தில் இருந்ததை அது நினைவூட்டியது....
அது ஆகான் கல் எறியப்பட்டு கொல்லப்பட்ட துக்க நாளாக இருந்தது!
சாபக்கேடானதை பாளையத்தில் கொண்டு வராதபடி ஜனங்களுக்கு நினைப்பூட்டும் இடமாக இருந்தது....
அவமானத்தின் சின்னமாக இருந்த இடம் இன்று நம்பிக்கையின் வாசல் ஆக மாறுகிறது!
ஓசியா 2:15
அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்
ஒவ்வொரு சாபத்தையும் தேவனால் ஆசீர்வாதமாக மாற்ற முடியும்! வறட்சியை செழிப்பாக அவரால் மாற்றக்கூடும்!! ஆம் ஒரு காலத்தில் அவமானம் மற்றும் வெட்கத்தின் அடையாளமாக இருந்த இடம் தேவன் இடைபடும் போது நம்பிக்கையின் வாசலாக மாறும்!!!
Comments