நீ அதிக அலுவலாய் இருந்தால் இது இடைவேளைக்கு நேரம்...
உன்னை அலுவலாய் வைத்துக்கொள்வது பிசாசின் வேலை...
நீங்கள் தேவனுக்கு நேரம் செலவிட முடியமல் அலுவலாய் இருப்பீர்கள் என்றால் பிசாசு உங்கள் வாழ்வை ஆளுகை செய்ய துவங்கி விட்டான்....
நீங்கள் தேவனிடம் ஐக்கியம் கொள்ளும்படியான ஒரு நோக்கத்தோடு படைக்கப்பட்டீர்கள்...
அவர் பாதத்தில் அமர்வதற்கு நேரமில்லை என்றால் படைப்பின் நோக்கத்தை இழந்துவிட்டீர்கள்...
பிசாசு உங்களை அலுவலாய் வைத்துக்கொண்டு தேவனை ஆராதிப்பதை தடுக்க அனுமதிக்காதே!
தேவனிடம் நெருங்கிவருவதற்கு தடையாய் இருக்கும் எந்த செயலையும் நீ துண்டித்து விடு......
யாத்திராகமம் 5:8
அவர்கள் முன்செய்து கொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பலாய் இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்
உன்னுடைய முதலும் முக்கியமான நேரம் உன்னைப் படைத்தவருக்குரியது! உன்னை தேவனிடம் நெருங்க விடாமல் தடைசெய்யும் எந்த அலுவலையும் உன் வாழ்க்கையில் இருந்து அகற்றிவிடு!! கர்த்தருடைய சமூகத்தில் நேரம் செலவிட முடியாதபடி அலுவலில் மாட்டிக் கொள்ளாதே!!!
Comments