ஆண்டவரோடு உள்ள உறவு நீ உன் வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுத்த பின்பு ஆரம்பிக்கவில்லை..
நீ உன் தாயின் கருவிலிருந்து உலகிற்கு வெளிவந்த அந்த நாளிலும் ஆரம்பிக்கவில்லை...
நீ உன் தாயின் கருவில் உருவாக்கப்படும்போது ஆரம்பிக்கவில்லை..
தேவன் உன்னை குறித்து அவர் மனதில் நினைத்த பொழுது ஆரம்பமானது...
ஆம் உன்னை இந்த குடும்பத்தில் இணைப்பதற்கு முன்பதாகவே அவர் உன்னை குறித்து அவர் மனதில் நினைத்து இருக்கிறார்...
உன் வாழ்வின் முடிவை அவர் அறிந்திருக்கிறார்...
நீ உன்னதமான தேவனுக்கு சொந்தமான நபர்...
நீ பார்க்கும் அனைத்தையும் படைத்தவர், உன்னை சொந்தமாக்கிக் கொண்டார்...
அவர் சிலுவையில் மரிக்கும் தருவாயில் உன்னை அவர் மனதில் வைத்திருந்தார்...
தேவன் உன்னில் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்றால் ஒரு பெரிய நோக்கத்தை உனக்கென்று வைத்திருக்கிறார் என்பதை நம்பு...
எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
உனக்கு என்று ஒரு தெய்வீக நியமனம் இருக்கிறது! உன் வாழ்வின் நோக்கத்தை கண்டுபிடிக்கும் பயணத்தை நீ மேற்கொண்டால் உன் வாழ்வு கனி நிறைந்ததாக இருக்கும்!! ஒவ்வொரு அசைவுக்கும் அவரை சார்ந்துக்கொள்!! தேவன் உன் வாழ்க்கையில் வைத்திருக்கும் நோக்கத்தை நோக்கி தொடர்ந்து ஓடு!!!
Comments