நீ தேவனுக்கு சொந்தம்

உன்னை சுற்றியுள்ளவர்கள் உன்னுடைய திறமைகளையும் தாலந்துகளையும் குறைத்து மதிப்பிடலாம்...


உன்னை படைத்தவர் நீ படைக்கப்பட்ட நோக்கத்தை நன்கு அறிவார்...


இந்த முழு உலகமும் உன்னை கவனிக்காமல் இருக்கலாம்...


இலட்சக்கணக்கான பேர்களுக்கு மத்தியில் ஆண்டவர் உன்னை உண்மையாய் கவனிக்கிறார்...


நீ நேசிக்கிறவர்கள் உன்னை வெறுக்கலாம்...


அவர் உன்னை மறப்பதில்லை ஏனென்றால் தன் உயிரையே உனக்காக தியாகம் செய்திருக்கிறார்...


உன் தலையில் உள்ள முடி எல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது...


நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கணக்கில் உள்ளது...


உன் கண்ணீர் எல்லாம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது...


உன்னுடைய கதறல்கள் கேட்கப்பட்டிருக்கிறது...


உன் வாழ்க்கை பொக்கிஷமாய் உள்ளது...


தேவனுக்கு நீ எப்பொழுதும் விசேஷித்த நபர்...


லூக்கா 12:7


உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.


நீ ஆண்டவருக்கு விலைமதிப்பற்றவன்! நீ அவருடைய உடைமை!! நீ ஆண்டவருக்கு முக்கியம்!!!






2 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041