இந்த ஆச்சரியமான அன்பு என்னை கண்டு கொண்டது!
என்னை நானே நேசிக்க கூடாத நிலைமையிலும் தேவன் என்னை நேசித்தார்...
ஒருவரும் என்னை கண்டு கொள்ளாத போது அவர் என்னை தூக்கி எடுத்தார்....
ஒன்றுக்கும் உதவாத நபர் என்று முத்திரை செய்யப்பட்ட என்னை அவர் விலை கொடுத்து வாங்கினார்....
அவர் என்னை சுத்தமாக்கி புதிதாக்கி தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்....
எல்லையற்ற அன்பினால் என்னை நேசிக்கிறார் ஒரு போதும் அதிலிருந்து மாற மாட்டார்.....
அவர் என்னை சுமந்து செல்லும் தகப்பன்....
அவர் என் வாழ்வை நடத்தும் எஜமானன்....
அவர் என் ஆத்தும நேசர்....
அவர் இயேசு! எனக்கெல்லாம் அவரே!
ரோமர் 1:16
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
அவர் அன்பைப் பற்றிப் பேச நான் ஒருபோதும் வெட்கப்படேன்! இயேசுவின் அன்பு என்னை கண்டு கொண்டு மறுரூபம் ஆக்கிக்கொண்டு இருக்கிறது!! நம்பிக்கை இல்லாத முடிவு உடையவர்களுக்கு அவரே முடிவு இல்லாத நம்பிக்கையாய் இருக்கிறார்!!!
Comments