நியாயம் தீர்க்காதே

தேவன் அபிஷேகம் பண்ணிவர்களை நியாயம்தீர்ப்பது மிகவும் எளிதான காரியம்....


நாம் குற்றஞ்சாட்டி நியாயம் தீர்ப்பதில் தேவன் பிரியமாக இருப்பதில்லை.....


மற்றவர்களை பற்றி விமர்சித்து அவர்கள் செய்த தவறுகளை குறித்த பேசுவதைவிட ஏன் அவர்களுக்காய் பரிந்து பேசக்கூடாது?


சவுலின் மீது தேவனுடைய அபிஷேகம் இருந்ததினால் தாவீது அவனை புண்படுத்த விரும்பவில்லை.....


மனுஷன் மீது உள்ள தேவனுடைய அபிஷேகத்தை கானம்பண்ணி தேவனே அவர்களை நியாயம் தீர்க்க விடுவது நல்லது அல்லவா?


1 சாமுவேல் 24:6


அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி


தாவீது தேவனை கனம் பண்ணி! அவன் தேவனுடைய அபிஷேகத்தை கனம் பண்ணின படியால் சவுலை புண்படுத்தவில்லை!! தேவனுடைய ஜனங்களைப் பற்றி தவறாக பேசுவதைக் காட்டிலும் அவர்களுக்காக ஏன் முழங்காலில் ஜெபிக்க கூடாது???


1 view

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041