நீ யாருடன் நடக்கிறாய்?

உன்னுடைய திறமைகள் மற்றும் தாலந்துகள் அல்ல.....


நீ யார் நீ எங்கிருந்து வருகிறாய் என்பதினால் அல்ல....


நீ கடின உழைப்பினால் சம்பாதித்த பணமும் அல்லது உனது படிப்பு அல்ல.....


உன்னுடைய குடும்பம் நண்பர்கள் அல்லது நீ அறிந்திருக்கிற மற்றவர்கள் அல்ல....


இந்த பின்னணி எதுவும் இல்லாதபோதும் நீ தேவனுடன் நடப்பாயானால் உன்னுடைய இலக்கை உன்னால் அடைய முடியும்....


அப்போஸ்தலர் 4 : 13


பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்


பேதுருவும் யோவானும் இயேசுவோடு இருந்தார்கள் - அதுதான் மாற்றத்தை உண்டு பண்ணியது! நீ தேவனுடன் தினம் நடக்கிறாயா? நீ நிச்சயம் உன் இலக்கை அடைவாய் - அவரோடு தினமும் நடந்து கொண்டே இரு!!!


1 view

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041