பரம தரிசனத்திற்க்கு நீ கீழ்ப்படிகிறாயா?
நீ என்னவாக இருக்கும்படி தேவன் விரும்புகிறாரோ அதையே நீயும் விரும்புகிறாயா?
நீ விரும்பியதைச் செய்கிறாயா அல்லது அவர் விரும்புவதைச் செய்கிறாயா?
உன் வாழ்க்கைக்கு தேவனிடம் ஒரு அற்புதமான நோக்கம் இருக்கிறது ....
அந்த நோக்கத்தை நிறைவேற்ற அதற்கேற்ற தாலந்தும் உனக்கு வழங்கப்பட்டுள்ளது ....
அவருக்காக காத்திருப்பவர்களுக்கு அவர் தனது திட்டங்களை வெளிப்படுத்துகிறார் ....
அந்த பரலோக தரிசனம் உன்னை தூண்டுகிறதா?
உன் வாழ்க்கையின் நோக்கம் உன்னை உந்துகிறதா?
கீழ்ப்படிதலுள்ள இருதயத்தோடு தேவன் வைத்திருக்கும் திசையில் ஓடு!
அப்போஸ்தலர் 26: 19
“ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை."
கீழ்ப்படிதல் உன் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் தருகிறது! தேவனுக்கு கீழ்ப்படி - அவர் சொல்வதைச் செய், நீ விரும்புவதைச் செய்யாதே !! நினைவில் கொள்! நீ ஒரு பெரிய அழைப்பை பெற்று இருக்கிறாய் - உனக்காக தேவன் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற ஓடு !!!
コメント