ஆபிரகாம் அற்புதத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தபோது....
அவனைப் போலவே தேவையுடைய மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆயத்தமாய் இருந்தான்....
உன்னிடம் இல்லாத ஒரு ஆசிர்வாதத்தை மற்றவர்கள் பெற்றுக் கொள்ளும்படி உன்னால் ஜெபிக்க முடியும்....
உண்மையான இருதயத்துடன் செய்யப்பட்ட பரிந்துரை ஜெபத்தை எப்போதும் ஆசீர்வாதம் தொடரும்....
பரிந்து பேசுகிறவர்கள் தேவனையும் அவர் வழியையும் அறிந்தவர்கள்....
பரிந்து பேசுகிறவர்களுக்கு தேவன் தம்முடைய இருதயத்தை வெளிப்படுத்துவார்....
எசேக்கயேல் 22:30
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்
பரிந்து பேசுகிறவர்களை தேவன் தேடிக்கொண்டு இருக்கிறார்! இரக்கத்திற்காக அவர் கதவண்டையில் நிற்பதுதான் பரிந்துரை ஜெபம்!! ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக தூபமாய் இருக்கிறது - மற்றவர்களுக்காக ஜெபி!!!
Comments