என்ன ஒரு மனப்பான்மை!
அவர்கள் துன்புறுத்தப்பட்டபோதும்...
சீஷர்கள் தங்கள் பிரச்சினையை குறித்து முறுமுறுக்கவும் புலம்பவுமில்லை...
தேவன் அனுமதித்த துன்பத்தின் பாதையில் செல்லும்போதும் ஏன் என்று அவரை கேட்கவுமில்லை...
அவர்களுக்கு நடந்தவற்றை வைத்து அவர்கள் விசுவாசத்தை இழக்கவுமில்லை...
அவர்கள் மனம் கசந்து குறை கூறவுமில்லை...
அதை பாக்கியமாக எண்ணினார்கள்...
அப்போஸ்தலர் 5:41
அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
நெருக்கமான பாதையில் நடக்கும் பொழுது உன்னுடைய பிரதிபலிப்பு என்ன? நினைவில்கொள் - தேவன் உன்னைப்பாத்திரனாக எண்ணியிருக்கிறார்!! விசுவாசத்தில் நிலைத்திருக்கும் படியாக நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்!!!


Comments