எவ்வளவு பெரிய சிலாக்கியம்! மோசேயின் முகம் பிரகாசித்தது!
தேவனே நம்முடைய மகிமை.....
நம்முடைய பிரகாசத்திற்கு காரணம் அவரே...
அவருடைய பிரசன்னத்தில் நாம் பெற்றுக்கொள்ளும் கிருபையால் தான் உண்மையான அழகு இருக்கிறது....
எத்தனை அதிகம் அவரோடு இருக்கிறோமோ அத்தனை அதிகமாய் அவரை பிரதிபலிப்போம்....
நீ தேவனோடு பேசுகிறாயா?
அதைத் தொடர்ந்து செய்கிறாயா?
நீ தேவனோடு பேசிக்கொண்டு இருக்கும்போது உன் முகம் மட்டுமல்ல உன் குணமும் பிரகாசிக்கும்!
யாத்திராகமம் 34:29
மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்
நீ தேவனிடம் பேசும்போது நீ யார் என்பதை அறிந்து கொள்வாய்! நீ தேவனிடம் பேசும்போது அவர் மகிமை உன்னை மூடும்!! அவரை பிரதிபலிப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்!!!


Comments