மற்றவர்கள் பாராட்டப்படும் போது எப்படி உணர்கிறாய்?
மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படும் போது களிகூறுகிராயா?
மற்றவர்கள் உயர்த்தப்பட்டும் நீ அதே நிலைமையில் இருக்கும்போது உன் ஆவி என்ன சொல்லுகிறது?
இன்னும் உன்னுடைய ஜெபங்கள் பதிலளிக்க படாமல் இருக்கும் போது மற்றவர்களுடைய ஜெபத்திற்கு தேவன் பதில் தரும் போது நீ அதற்காக அவரை துதிக்கிறாயா?
தேவன் உன் வாழ்க்கையில் வைத்திருக்கிற திட்டத்தை அறிந்து கொள்ள நீ தவறும்போது பொறாமை எழும்பும்....
மற்றவர்களை நீ அன்பு கூறாதபோது பொறாமை எழும்பும்....
தேவன் உன் வாழ்க்கையில் நல்ல ஆசீர்வாதங்களை வைத்திருக்கும்போது மற்றவர்களுடைய ஆசீர்வாதங்களை இச்சிப்பதுதான் பொறாமை!
பொறாமை தேவன் கொடுத்த சந்தோஷத்தை கெடுக்கும் - அது உன் எலும்புகளை நொறுக்கும்!
யாக்கோபு 3 : 16
வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.
பொறாமைக்கு இடம் கொடாதே! உனக்கு உரியது உனக்கு உரியதுதான்!! சுத்த இருதயம் மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படும்போது சந்தோஷப்படும் - தேவ சமூகத்தில் உன் இருதயத்தை ஆராய்ந்து அதை சுத்தம் பண்ணிக் கொள்!!!


Commentaires