நாம் எதை முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது முக்கியம்...
நீ எதையும் செய்யலாம் ஆனால் எல்லாவற்றையும் செய்ய இயலாது...
நீ அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கு சில காரியங்களை விட்டுவிட தான் வேண்டும்...
நீ வளர வேண்டும் என்று விரும்பினால் பிறருக்கு வேலைகளை பகிர்ந்து கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்...
நீ எதை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிவாயானால் உன் வேலைகளை நீ சரியாய் முக்கியத்துவப்படுத்துவாய்...
உன் நேரத்தை கெடுக்கும் காரியங்களுக்கு வேண்டாம் என்றும் கணிதரும் காரியத்திற்கு ஆம் என்றும் சொல்ல கற்றுக்கொள்!
பிறரை பிரியப்படுத்துவதை நோக்கமாக இருந்தால் வாழ்க்கை கனியற்ற வாழ்க்கையாகவே காணப்படும்...
தேவனை பிரியப்படுத்த வாழு- அப்பொழுது நீ எல்லாவற்றையும் சரியாய் முக்கியத்துவம் கொடுப்பாய்...
அப்போஸ்தலர் 6:2
அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
உன்னுடைய பொறுப்பை அறிந்துகொள்! தேவன் உனக்கு அளித்திருக்கும் பணியை நிறைவு செய்ய உன் வாழ்க்கையை ஊற்றிவிடு!! தேவைப்படும் போதெல்லாம் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்ல கற்றுக் கொள்!!!
Comments