தேவனுடைய பிள்ளையாய் இருக்கிற உனக்கு எப்போதும் துவங்கும் முன் சிந்தித்துபார்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு.....
நீ கேட்கும் பொழுது உன்னை வழிநடத்த ஒரு தேவன் உண்டு!
பின்பு ஏன் நீ ஏதோ ஒரு தீர்மானத்தில் குதித்து அவதிப்பட வேண்டும்?
பின்பு ஏன் நீ குழியில் விழுந்த பின்பு தேவனிடம் வழி காட்டும்படி கேட்க வேண்டும்?, முன்பே தவிர்த்திருக்கலாமே?
தேவனுடைய கதவைத் தட்டி அவர் நீ என்ன செய்ய விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்வது ஞானமான செயல் அல்லவா?
தேவன் உன்னை வழி நடத்தினால் நீ ஒருபோதும் பாதை தவறி போக மாட்டாய்...
ஏசாயா 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
முதலாவது பிதாவிடம் விசாரி! நீ வருத்தப்பட வேண்டிய அவசியமே இருக்காது!! அவர் எப்பொழுதும் சரியாய் நடத்துபவர்!!!
Commentaires