மேய்ப்பனின் குரல்

நீ மேய்ப்பனின் குரலை அறிவாயா?


அவர் குரலை அறிந்த ஆடு அவருக்குப் பின் செல்லும்....


மேய்ப்பன் தன் ஆடுகள் குரலை அறிவார்....


மேய்ப்பனின் உதவி வேண்டும் என்றால் ஆடு மேய்ப்பன் இடம் பேச வேண்டும்.....


ஆட்டின் குரலை வைத்து மேய்ப்பனால் அதன் சூழ்நிலை என்ன என்று அறிந்து கொள்ள முடியும்....


உன் மேய்ப்பன் உன்னை பெயர் சொல்லி அழைக்கிறார்....


அவர் உன்னை அறிவார் அவர் தோளில் வைத்து உன்னை சுமக்க அவர் ஆவலாய் இருக்கிறார்....


அந்த நல்ல மேய்ப்பனை பின்பற்ற உனக்கு விருப்பம் உண்டா?


அவர் குரல் கேட்பதற்கு உனக்கு ஏக்கம் உண்டா?


யோவான் 10:4


அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது


உன் மேய்ப்பன் உனக்கு முன் செல்கிறார்! அவர் உன்னை அறிவார் - உன் உணர்வுகளை அறிவார் - உன் மீது கரிசனை இருக்கிறார்!! அவர் குரல் கேட்க நீ ஆயத்தமா? அவர் வேதத்தை வாசி!!!
2 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041