விட்டு விடாதே!

பயணத்தின் பாதி வழியில் விட்டுவிடாதே ...


அவரது வாயின் வார்த்தைகள் நிறைவேறும் வரை விட்டுவிடாதே ...


நீ வெற்றி பெறும் வரை விட்டுவிடாதே. ஆம்! வெற்றி உன்னுடையது ...


நீ பெலனற்ற போதிலும் சோர்வாக உணரும்போதும் விட்டுவிடாதே. இன்னும் முடிந்துவிடவில்லை ...


எளிதில் விட்டுவிடாதே. உன் கைகள் நீட்டப்பட்டிருக்கும் வரை எதிரியால் உன்னை தோற்கடிக்க முடியாது ...


தேவனிடமிருந்து பதில்களைப் பெறும் வரை உன் ஜெபங்களை விட்டுவிடாதே ...


யோசுவா 8: 26


ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை

கதவுகள் திறக்கும் வரை தட்டிக் கொண்டே இரு ! இலக்கை அடையும் வரை உன் பயணத்தை தொடர்!! பாதிவழியில் பயணத்தை விட்டுவிடாதே - முன்னேறி செல்!!!

1 view

Recent Posts

See All

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041