கல்லான இருதயம் மாற ஜெபிப்போம்கல்லான இருதயம் மாற ஜெபிப்போம்


நாம் யாருக்காக சுவிசேஷம் சொல்ல பிரயாசைப் படுகிறோமோ அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிப்பது அவசியமாய் இருக்கிறது. அவர்கள் இருதயங்கள் ஆயத்தமாகும் படி நாம் ஜெபிக்க வேண்டும். அவர்கள் இருதயம் நல்ல நிலமாக மாற வேண்டும்.


கல்லான இடங்களிலே விதைக்கப்படுகிற விதை வேர் ஊன்றுவது இல்லை. கல்லான இருதயமும் அப்படித்தான். அந்தக் கல்லானது இருதயம் உடைக்கப்பட்ட தேவனுடைய கரம் இறங்கி வரும்படி நாம் ஜெபிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. கனி கொடுக்கும் படி நாம் ஜெபிக்க வேண்டும்.


எசேக்கியேல் 36:26


உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.


மனப்பாட வசனம்


யோவான் 15:7


நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.ஜெபக்குறிப்புகள்


1. இருதயத்தின் கடினங்கள் மாற


2. சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் தடைகள் மாற


3. சடங்கு ஆச்சாரியமான கட்டுகளில் இருந்து விடுதலை உண்டாக


4. இருதயம் நல்ல நிலமாக மாற


5. விதைக்கப்பட்ட வசனம் உள்ளே செல்ல


6. வசனம் நல்ல விளைச்சலைக் கொண்டுவர


7. வசனத்தை சத்துரு பொறுக்கி போடாமல் இருக்க


8. சரியான இருதயத்தை தேவன் தர


9. உணர்வுள்ள இருதயத்தை தேவன் தர


10. தேவனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அந்த இருதயத்தில் உண்டாகH.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041