அவர்களுக்கு ஆவிக்குரிய தாகம் உண்டாகஅவர்களுக்கு ஆவிக்குரிய தாகம் உண்டாக ஜெபிக்க வேண்டும்ஆத்தும ஆதாய ஊழியம் செய்யும்போது நாம் விதைக்கிற விதை பலனை கொண்டுவர வேண்டுமென்றால் அவர்கள் நல்ல நிறமாக மாற வேண்டும் என்பதை நாம் அறிந்து கொண்டோம். நல்ல நிலம் என்று சொல்லும்போது அந்த நிலமானது அந்த விதியை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். விதையை மாத்திரமல்ல அதற்கு நீர் பாய்ச்சப்படும் போது அதனுடைய வளர்ச்சிக்கு தேவையான தண்ணீரை தாகத்தோடு ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை அந்த நிலத்தில் காணப்பட வேண்டும்.


ஆம் நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களுக்கு ஒரு ஆவிக்குரிய தாகம் உண்டாக வேண்டும் என்று நாம் தினமும் ஜெபிக்க வேண்டும். தீவினை பற்றின ஒரு வாஞ்சை ஆண்டவரே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இவை இரண்டும் அவர்களுக்கு இருக்கும் என்றால் நாம் விதைக்கிற விதை வேரூன்றி பலனை கொடுக்க போதுமானதாக இருக்கும். எனவே ஆவிக்குரிய தாகம் அவர்களுக்கு உண்டாகும்படி ஜெபிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.


ஏசாயா 41:17 -18


சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி


ஜெபிப்போம்! ஜெயம் எடுப்போம்!!


 

மனப்பாட வசனம்


ரோமர் 5:8


நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.


 

ஜெபக்குறிப்புகள்


1. அந்த நபருக்கு தேவனைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாக


2. அந்த நபர் தேவனை தேடும் படியான சூழ்நிலை உண்டாக


3. ஆவிக்குரிய தாகம் அவர்களுக்குள் ஏற்பட


4. நல்ல நிலமாக விதையை ஏற்றுக்கொள்ள


5. நிலத்தில் ஊற்றப்படுகிற தண்ணீரை தாகத்துடன் ஏற்றுக்கொள்ள


6. இரட்சிப்புக்கு தடையாய் இருக்கும் காரியங்கள் உடைக்கப்பட


7. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


8. மனம் திரும்புதல் உண்டாகும்படி


9. கர்த்தரே தேவன் என்கிறதான விசுவாசம் அவர்கள் உள்ளத்தில் ஏற்பட


10. தேவ அன்பு அவர்கள் உள்ளத்தில் பிரவேசிக்க27 views
hop church logo.jpg