நம்முடைய நீதி எல்லாம் அழுக்கான கந்தைநம்முடைய நீதி எல்லாம் அழுக்கான கந்தைநம்முடைய சுய நீதியும் நாம் செய்கிற நல்ல காரியங்களும் பாராட்டப்பட கூடியவைகளாக இருந்தாலும் அவர்கள் ஒரு நாளும் நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்ல முடியாது. இதை நாமும் அறிந்திருக்க வேண்டும் நாம் நடத்துகின்ற நபரும் இதை புரிந்து கொள்ளும்படி நாம் ஜெபிக்க வேண்டும்.


நாம் யாருக்கு சுவிசேஷ விதை விதைக்கிறோமோ அவர்கள் நீதியின் மீது அவர்களுக்கு இருக்கிற நம்பிக்கைகள் உடைக்கப்படும் படியாகவும் தேவனுடைய நீதியை அவர்கள் முற்றிலும் சார்ந்து கொள்ளும்படி நாம் அவர்களுக்காக ஜெபிப்பது அவசியமாக இருக்கிறது.ஏசாயா 64:6


நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது

 

மனப்பாட வசனம்


விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.


எபிரெயர் 11:6


 

ஜெபக்குறிப்புகள்


1. சுயநீதி எண்ணத்தில் இருந்து விடுதலையாக


2. நற்கிரியைகளை தாண்டி தேவனுடைய தேவையை உணர்ந்து கொள்ள


3. முழுமனதோடு அவர்கள் தேவனைத் தேட


4. மனக் கண்கள் திறக்கப்பட


5. செவிகள் திறந்தவைகளாக இருக்க


6. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசமாக


7. வாயினாலே அவர்கள் இயேசுவை அறிக்கை செய்ய


8. உண்மையான மனம் திரும்புதல் உண்டாக


9. இயேசுவே மெய்யான தேவன் என்பதை உணர்ந்துகொள்ள


10. இரட்சிப்புக்கு ஏதுவான தடைகள் உடைக்கப்பட23 views
hop church logo.jpg