ஞானம் உள்ளவன் யார்
ஆத்துமாக்களை ஆதாயம் பணிதல் என்பது ஒரு ஞானம் உள்ள செயல். நாம் அதை செய்ய வேண்டுமென்று தேவனாகிய கர்த்தர் விரும்புகிறார். ஞானம் உள்ளவன் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வான். ஞானமுள்ள மகன் தகப்பனை சந்தோஷ படுத்துவான். ஆம் இந்த ஊழியத்தை செய்யும் நாமும் தேவனுடைய இருதயத்தை களிகூர பண்ணுவோம்.
பகற் காலம் இருக்கும் போதே நம்மை அனுப்பின அவருடைய சித்தத்தை நிறைவேற்ற இந்த ஊழியத்தை நாம் செய்ய வேண்டும். ஒருவரும் கிரியை செய்யக்கூடாத காலம் வருவதற்கு முன்பாக வாசல்கள் அடைவதற்கு முன்பாக உண்மையாக ஊழியம் செய்வோம் அறுவடையை பெற்றுக்கொள்வோம்.
நீதிமொழிகள் 11:30
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்
மனப்பாட வசனம்
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28
ஜெபக்குறிப்புகள்
1. தேவன் ஞானத்துக்காக
2. தேவனுடைய வழிநடத்துதல் பெற்றுக்கொள்ள
3. தேவ ஆவியினால் நடத்தப்பட
4. பயத்தின் ஆவிகள் நீங்க
5. உற்சாக ஆவியைப் பெற்றுக்கொள்ள
6. மனநிறைவுடன் பணிசெய்ய
7. ஆத்தும பாரம் உண்டாக
8. திறப்பின் வாயிலே தினமும் நிற்க
9. கடைசி பரியந்தம் நிலைத்து இருந்து ஊழியம் செய்ய
10. ஆத்தும ஆதாய பணியை இடைவிடாமல் செய்ய
அழகான பாதங்கள்
コメント