பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம்பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம்பரலோகத்தில் மிகுந்த சந்தோஷத்தை கொண்டு வருவது எது என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டால் மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும். தேவனுடைய இருதயத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவது எதுவோ அதை செய்ய உங்களுக்கு விருப்பம் உண்டா?


அழிந்து போகிற ஆத்துமாக்களுக்கு சுவிசேஷ விதையை கொண்டு செல்வோம். சரியான நேரத்தில் தேவ ஞானத்தை பெற்றுக்கொண்டு விதைப்போம். நிச்சயம் ஏற்ற காலத்தில் பெரிய அறுவடையை அறுப்போம். ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்!


லூக்கா 15:7


அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்


 

மனப்பாட வசனம்


கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.


1 பேதுரு 3:15


 

ஜெபக்குறிப்புகள்


1. தேவனிடம் விதையை பெற்றுக்கொள்ள


2. தேவன் நல்ல அறுவடையை கட்டளையிட


3. அவர்கள் மனக் கண்கள் திறக்கப்பட


4. அவர்கள் செவிகள் சுவிசேஷத்தை கேட்க


5. அவர்கள் நாவினால் அறிக்கை செய்ய


6. அவர்கள் இருதயத்தில் விசுவாசம் உண்டாக


7. இரட்சிப்பின் ஜெய கம்பீரம் உண்டாக


8. கல்லான இருதயம் உடைக்கப்பட


9. குடும்பம் குடும்பமாக இரட்சிப்பு பரிபூரணமாக


10. எல்லாவற்றிலும் தேவ நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்


அழகான பாதங்கள்

41 views
hop church logo.jpg