நாம் சுவிசேஷ ஊழியம் செய்வதற்கான முதல் தடை பயம்நாம் சுவிசேஷ ஊழியம் செய்வதற்கான முதல் தடை பயம்


அனேக வேளைகளில் ஆத்தும பாரம் நமக்குள் இருந்தாலும் நாம் சுவிசேஷ ஊழியம் செய்யத் தவறுவது ஏன்? பயம் நம்முடைய இருதயத்தை ஆளுகை செய்யும் போது தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து கடினமாக மாறிவிடுகிறது. இது குறித்த பயம் நமக்குள்ளே கிரியை செய்கிறது?


நான் இயேசுவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் போது என்னுடைய நட்பு இறந்து போவேனோ என்ற பயம். நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி பகிர்ந்து கொள்ளும்போது என்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம். எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஆண்டவருடைய அன்பை அறிவிக்கும்போது மற்றவர்கள் என்னிடம் கடினமாக நடந்து கொள்வார்களோ என்ற பயம்.


நாம் மறந்து போகிற ஒரு காரியம் - நாம் இந்த ஊழியத்தை செய்யும்போது உலகத்தின் முடிவுபரியந்தம் தேவனாகிய கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார் என்ற வாக்குத்தத்தத்தை பெற்று இருக்கிறோம்.


மத்தேயு 28:20


இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார் ஆமென்


தேவனாகிய கர்த்தர் நம்மோடு கூட இருக்கும்போது நாம் ஏன் பயப்பட வேண்டும் விசுவாசத்தோடு விதையை விதைப்போம்மனப்பாட வசனம்


யோவான் 8:36

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.ஜெபக்குறிப்புகள்


1. பயத்தின் ஆவியை மேற்கொள்ள


2. தைரியமாய் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ள


3. தேவன் நம்மோடு கூட இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள


4. பரிசுத்த ஆவியானவரின் உதவியை பெற்றுக் கொள்ள


5. தெளிந்த புத்தியின் ஆவியைப் பெற்றுக்கொள்ள


6. பயமின்றி மனுஷர் முன்பாக தேவனை அறிக்கை செய்ய


7. நமக்காக ஜீவனை கொடுத்த தேவனைப் பற்றி பேச தயக்கம் இல்லாமல் இருக்க


8. உலகப்பிரகாரமான உறவுகளைக் காட்டிலும் தேவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க


9. அழிந்து போகின்ற ஆத்துமாக்களை குறித்த ஆழமான பாரம் உண்டாக


10. ஆத்துமா பாரத்தினால் நிறையபட்டு பயத்தை மேற்கொள்ள45 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041