காத்திரு

சிஷ்ர்கள் வாக்குத்தத்தம் பெரும்படி காத்திருக்க அறிவிக்கப்பட்டார்கள்...


ஆனால் அவர்கள் யூதாசுடைய இடத்திற்கு இன்னொரு சீஷனை தெரிந்தேடுப்பதில் அவசரப்பட்டார்கள்...


ஆண்டவருக்காக காத்திருப்பதை விட்டு அவர்களுடைய சொந்த அறிவிலும் திட்டத்திலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்...


இவர்கள் எடுத்த தீர்மானம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப் பட்டது அல்ல...


காத்திருக்கும்படி சொல்லப்படும்போது காத்திரு...


ஆவியானவர் உன்னை ஆட்கொண்டு வழிநடத்தும்வரை காத்திரு...


இதுதான் சீஷர்கள் கடைசியாக தங்கள் சொந்த அனுபவத்தில் எடுத்த தீர்மானம்...


நீ தேவனுடைய வழிநடத்துதலுக்காக காத்திருக்கிறாயா அல்லது உன் சொந்த அறிவில் செயல்படுகிறாயா?


நீ ஜெபித்து தீர்மானம் எடுக்கலாம் ஆனால் நீ தேவனால் வழிநடத்தப்படுகிறாயா?


அப்போஸ்தலர் 1:24 -25


யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக, இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி


கர்த்தர் உன்னை காத்திருக்க சொன்னால் - அவருடைய வார்த்தைக்காக ஜெபத்தில் காத்திரு! நீ தீர்மானங்களை எடுப்பதற்க்கு முன்பு ஆவியினால் நிரப்பப்பட்டிரு!! தேவன் உன் வாழ்வின் தீர்மானங்களை ஆட்கொள்ளட்டும்!!!

2 views

Recent Posts

See All
hop church logo.jpg