உன்னால் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே இருந்துகொண்டு, அமைதியான தூங்கவும் முடியும் ....
மன அமைதியை தேவனுடைய சித்தத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ள முடியாது ....
யோனா தேவனுடைய சித்தத்திற்கு மாறாக இருந்தும் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தார் ....
நீ எவ்வளவு அமைதியாக உணர்கின்றாய் என்பதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் ....
உன் உணர்வுகளின் அடிப்படையில் உன் தீர்மானங்களை எடுக்காதே ....
உன் முடிவுகள் அனைத்தும் தேவனின் ஜீவனுள்ள வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கட்டும் .....
ஆம், தேவனுடைய வார்த்தை மிகவும் வல்லமையுள்ளது, அது அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் நோக்கி நேராக அழைத்துச் செல்லும்!
யோனா 1: 5
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரை பண்ணினான்.


நீ ஒரு முடிவை எடுக்கும்போது, மன அமைதியைக் கொண்டு இது தேவனின் விருப்பம் என்று நினைக்கவேண்டாம்! தேவனின் வார்த்தையை விட எதுவும் உறுதிப்படுத்தாது !! தேவனின் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு உன் எல்லா தீர்மானங்களை எடு - வேதம் ஒரு பேசும் புத்தகம் !!!
Comments