சுவிசேஷம் சொல்லுவது என் கடமை
I கொரிந்தியர் 9:16
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
எதுவெல்லாம் கடமை ?
பிள்ளைகள் தன் தாய் தகப்பனை பராமரிப்பது கடமை
வேலை செய்கிறவர்கள் தன் வேலையை சரியாக செய்வது கடமை
அதேபோல கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம்முடைய கடமை ஆண்டவராகிய இயேசுவை பற்றி மற்றவர்களிடம் சொல்லுவது. ஆகையால் நாம் நம்முடைய கடமையை புரிந்துகொண்டு இந்த நற்செய்தியாகிய சுவிசேஷத்தை சொல்லுவோம்.
ஆமென்.
மனப்பாட வசனம்
ரோமர்
3:23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
ஜெபக்குறிப்புகள்
சுவிசேஷம் சொல்வது என் கடமை
1. சுவிசேஷ ஊழியத்தில் முக்கியத்துவத்தை ஒவ்வொரு நாளும் உணர
2. ஆத்தும பாரம் இருதயத்தில் ஊற்றப்பட
3. தேவனுடைய பிள்ளையாய் பொறுப்பை உணர்ந்து கொள்ள
4. இயேசுவை அறியாத ஜனங்கள் மீது ஒரு பாரம் உண்டாக
5. தேவனுடைய சத்தத்தை உணர்ந்து நம்முடைய கடமையை நிறைவேற்ற
6. அழிந்து போகும் ஆத்துமாக்களை பற்றின பாரம் பிரியாதிருக்க
7. சுவிசேஷ ஊழியம் செய்யும் வாஞ்சை அதிகரிக்க
8. ஒவ்வொரு நாளும் இந்த ஊழியத்தை செய்யும்படியாக
9. உரிமையை வேண்டுவதை விட்டு கடமையை நிறைவேற்ற
10. என்னை நம்பி தேவன் கொடுத்த பொறுப்பை உணர்ந்துகொள்ள
Comments