தைரியமாக சுவிசேஷத்தை சொல்ல ஜெபிப்போம்
ஆத்தும ஆதாய ஊழியத்தை செய்யும்படி நாம் பிரயாசப்பட்டு கொண்டு இருக்கிறோம். நம்மை தடை செய்கிற முக்கியமான ஒரு காரியம் பயம். தைரியமாக சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று சொல்லி நமக்காக நாம் ஜெபிப்பது அவசியமாக இருக்கிறது.
ஆதித் திருச்சபையில் நாம் வாசிக்கும் பொழுது பார்க்கலாம் பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுக்கு அருளப்பட்ட போது அவர்கள் பயங்கள் நீங்கி தைரியமாய் உயிர்த்தெழுதலை குறித்து பேசினார்கள் என்று. ஆம் பரிசுத்த ஆவியின் நிறைவு பெற்று கொண்டவர்களாய் தைரியமாக சுவிசேஷ ஊழியத்தை நாம் செய்யும்படி நமக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.
எபேசியர் 6:19
சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக
மனப்பாட வசனம்
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா).
சங்கீதம் 3:8
ஜெபக்குறிப்புகள்
1. பயமின்றி சுவிசேஷ ஊழியம் செய்ய
2. பரிசுத்த ஆவியானவரின் நிறைவை பெற்றுக் கொள்ள
3. இந்த ஊழியத்தை செய்யும்படி ஆவியானவரால் வழிநடத்தப்பட
4. இரட்சிப்பு கர்த்தருடையது என்பதை உணர்ந்து கொள்ள
5. சூழ்நிலையைக் கண்டு பயப்படாமல் இருக்க
6. தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறவர் என்பதை உணர்ந்து கொள்ள
7. தேவன் சரியான நேரத்தில் விதைக்கும் ஞானத்தை நமக்கு தர
8. தேவ கிருபை ஊழியத்தில் நம்மை தாங்க
9. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக
10. அந்த நபரின் நிமித்தம் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாக
Comentarios