கல்லான இருதயங்கள் உடைக்கப்பட ஜெபிப்போம்கல்லான இருதயங்கள் உடைக்கப்பட ஜெபிப்போம்கற்பனையான இடங்களில் விழுகிற விதையானது வேர் கொள்ள முடியாது. நாம் தரிசு நிலத்தை பண்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நல்ல விளைச்சல் உண்டாகும். அதுபோலவே நாம் யாருடைய இருதயத்தில் சுவிசேஷம் ஆகிய விதை விதைக்கிறோமோ அவர்கள் இருதயமும் பயன்படுத்தப்பட வேண்டும். நாம் ஜெபிக்கும்போது மாத்திரமே அவர்கள் இருதயத்தை தேவன் இரட்சிப்புக்கு ஏதுவாக ஆயத்தமாக்குவார்.


ஆம் அவர்களுடைய கல்யாண இருதயங்கள் உடைக்கப்படும் படியாகவும் தேவன் அவர்களுக்கு சதையான இருதயத்தை தரும்படி ஜெபிக்கவேண்டும். அப்பொழுது விதைக்கப்படுகிற வசனத்திற்கு அவர்கள் உணர்வு உள்ளவர்களாக இருந்து அதை ஏற்றுக்கொண்டு பலன் கொடுப்பவர்களாக மாறுவார்கள்.


எசேக்கியல் 11:19


அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்


 

மனப்பாட வசனம்


என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.


யோவான் 16:33


 

ஜெபக்குறிப்புகள்


1. நல்ல நிலமாக அவர்கள் இருதயம் மாற


2. கர்த்தர் அவர்கள் மன கண்களை திறக்க


3. தேவன் அவர்கள் செவிகளை கவனிக்கிற வைகளாய் மாற்ற


4. வாயினாலே அவர்கள் தேவனை அறிக்கை செய்ய


5. இருதயத்திலே அவர்கள் தேவனை விசுவாசிக்க


6. அவர்களுக்குள் விசுவாச விதை விதைக்க பட


7. அவர்கள் முழுமனதோடு தேவனிடம் திரும்ப


8. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


9. அவர்கள் இருதயத்தை தேவனுக்கு திறந்து கொடுக்க


10. இரட்சிக்கப்பட கூடாத படி உள்ள தடைகள் மாற


11. அவர்கள் நிமித்தம் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாக26 views
hop church logo.jpg