விதைக்கப்பட்ட விதை நல்ல பலன் கொடுக்க
நாம் சுவிசேஷம் ஆகிய விதையை விதைக்கும் போது அது நல்ல நிலத்தில் விழுந்த விதை ஆக இருக்கும்படி நாம் ஜெபிப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது. அது நல்ல நிலத்தில் விழாத பட்சத்தில் அது கனி கொடுக்க மாட்டாதே. ஆகவே நாம் விதைக்கிற விதை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும்.
வேதத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் விதைக்கிற மனுஷனுக்கு விதையை கொடுக்கிறவர் தேவன். தேவனிடத்தில் நாம் விதையை பெற்றுக் கொள்ளும்படி மற்றும் நாம் விதைக்கும் விதை சரியாக கனி கொடுக்கும்படி ஜெபிக்க வேண்டும்.
மத்தேயு 13:4
அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது
மனப்பாட வசனம்
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
ரோமர் 1:16
ஜெபக்குறிப்புகள்
1. விதையை தேவனிடத்தில் பெற்றுக்கொள்ள
2. நல்ல நிலமாக அந்த நபரின் இருதயம் மாற
3. விதைத்த விதை சரியான பலனை கொடுக்க
4. தேவன் விளைச்சலை உண்டுபண்ண
5. நீதியின் விளைச்சல் வர்த்திக்கபண்ண
6. ஆத்தும இரட்சிப்பு உண்டாக
7. சரியான நேரத்தில் விதை விதைக்க
8. விளைச்சலைக் கெடுக்கும் சத்துரு செயலிழந்து போக
9. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக
10. தேவ கரம் அந்த நபர் மீது இறங்கிவர
Commenti