பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உடையவர் இயேசு



பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உடையவர் இயேசு



நம்முடைய பாவங்களை மன்னிக்க அதிகாரம் உடையவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே. அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய பாவங்களை தன் மீது சுமத்திக் கொண்டு நமக்காக சிலுவையில் தன்னுடைய கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் சிந்தினார்.


அவர் சிந்திய ரத்தத்தினால் நமக்கு பாவமன்னிப்பு இன்றைக்கு உண்டாகியிருக்கிறது. அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் அவரவர் பாவ மன்னிப்பு என்பது நமக்கு ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதை அந்த நபருக்கும் தெரிவிக்க வேண்டும்.



யோவான் 5:24


என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்

மனப்பாட வசனம்


இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.


வெளிப்படுத்தின விசேஷம் 3:20



ஜெபக்குறிப்புகள்


1. அவர்களுக்கு பாவமன்னிப்பு உண்டாக


2. பாவ கட்டிலிருந்து விடுதலை உண்டாக


3. அவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள


4. சத்தியம் அவர்களை விடுதலை ஆக்க


5. அவர்கள் வாயினால் கிறிஸ்துவை அறிக்கை செய்ய


6. கல்லான இருதயம் மாற


7. இயேசு கிறிஸ்துவின் அன்பு அவர்கள் உள்ளத்தை தொட


8. உண்மையான மனம் திரும்புதல் உண்டாக


9. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


10. இரட்சிப்புக்கு இருக்கிற தடைகள் மாற



H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041