
மத்தேயு முதல் யோவான் வரை
13 நாட்கள் வேதம் வாசிக்க சவால்
கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றியுடன் வாழ வேத தியானம் மிகவும் முக்கியமானது. அனேக வேளைகளில் நாம் ஜெபிக்க நேரம் செலவழித்தாலும் வேதம் வாசிப்பதை தவிர்த்துவிடுகிறோம். அல்லது போதுமான அளவு வேதத்தை தியானம் பண்ணுவதற்கு என்று நாம் செலவிடுவதில்லை. வேத வார்த்தை ஜீவன் உள்ளதாக இருக்கிறது.
யோவான் 1:1 சொல்லுகிறது ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தையை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று. ஆம் வார்த்தையானவர் தான் மாம்சமாகி நமக்குள்ளே கடந்து வந்தார்.
வேத தியானம் நம்முடைய வாழ்க்கை மறுரூபம் ஆவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சத்தியத்தை அறியும்போது அது நம்மை விடுதலையாக்குகிறது.
- தினமும் வேதம் வாசிப்பதை குறித்து ஒரு சிறு வீடியோ அனுப்பப்படும்.
தினமும் ஒரு வசனம் மனனம் செய்ய கொடுக்கப்படும். அதை நாம் தவறாமல் மனனம் செய்யவேண்டும் .
- தினமும் வேதம் வாசிக்க வேதப்பகுதி (தினமும் 5 அதிகாரம்) கொடுக்கப்படும்.
- தினமும் ஜெபிக்க கொடுக்கப்படும்
இயேசு கிறிஸ்து சத்துருவை வார்த்தைகளை வென்றது போல நாமும் இந்த சவாலை எடுத்துக்கொள்ளும் வேத வார்த்தையை தியானிப்போம் சவாலை சந்திப்போம்.
இந்த சவாலில் கலந்துகொள்ள இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயரை பதிவு செய்யவும்
God bless you