மனன வசனம்
மத்தேயு 25:21
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
ஜெப குறிப்புகள்
1. தேவ வார்த்தை மரித்துப்போன சரீர அவயவங்களில் சுகத்தை உண்டாக்க
2. தேவ வார்த்தைக்கு உயிர்ப்பிக்கும் வல்லமை உண்டு என்பதை உணர்ந்து கொள்ள
3. முறிந்து போன உறவுகள் தேவ வார்த்தையின் வல்லமையால் சேர்க்கப்பட
4. விசுவாசம் செத்துப்போன சூழ்நிலையில் தேவ வார்த்தைக்காய் காத்திருக்க
5. சோர்ந்துபோன நேரங்களில் தேவ வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கபட
6. எல்லாம் முடிந்தது என்ற சூழ்நிலையில் வார்த்தையால் பலனைப் பெற்றுக் கொள்ள
7. தேவ வார்த்தையால் உயிர்ப்பிக்க கூடாதது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துகொள்ள
8. இல்லாதவைகளை இருக்கிறவைகளாய் அழைக்கிறவர் தேவன் என்பதை விசுவாசிக்க
9. அவர் வார்த்தையினாலே உருவாக்குபவர் என்பதை உணர
10. செத்துப்போன யாவைக்கும் உயிர் கொடுக்கும் தேவ வார்த்தை நம்மில் நிலைத்திருக்க
ஜெப குறிப்பை டவுன்லோட் செய்ய
Commentaires