நாம் ஏன் ஆத்துமாக்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றால் அது ஒரு ஆவிக்குரிய யுத்தம்
ஆத்துமாக்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டியது முக்கியமானது. சுவிசேஷ ஊழியம் செய்யும் போது ஜெபம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம் பெலவானை நாம் முந்தி கட்டினால் ஒழிய உள்ளே சென்று அவனுடைய கொள்ளையை நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது. இது மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உண்டான போராட்டம் அல்ல.
ஒரு நபர் ரட்சிக்க பட வேண்டும் என்றால் அவர்களுக்கு விரோதமாக கிரியை செய்யும் எல்லா சத்துரு கொண்டு வரும் போராட்டங்களும் தகர்க்கப் பட வேண்டும். அதனால் நான் ஜெபம் செய்வது மிகவும் முக்கியமானது.
எபேசியர் 6:12
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு
மனப்பாட வசனம்
யோவான் 11:40
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
ஜெபக்குறிப்புகள்
1. நம்முடைய போராட்டம் யாரோடு என்பதை உணர்ந்து கொள்ள
2. நம்முடைய சத்துரு பிசாசு மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள
3. ஆத்துமாக்களுக்காக திறப்பின் வாயில் நின்று ஜெபிக்க
4. பிசாசின் கட்டிலிருந்து அவர்கள் விடுதலை ஆக்கப்படும் படி
5. சத்துருவின் கோட்டைகள் இடிந்து விழ
6. பலவானை முந்தி கட்டும் அனுபவத்திற்காக
7. நாம் விதைக்கிற விதையை சத்துரு எடுத்துப் போடாமல் இருக்க
8. விதைக்கும் விதை ஒவ்வொன்றும் நல்ல நிலத்தில் விழுந்த விதையாய் பலன் கொடுக்க
9. ஆத்தும பாரத்துடன் அனுதினம் ஜெபிக்க
10. ஆவிக்குரிய யுத்தம் செய்ய
Comments