அவர்கள் கண்கள் திறக்கப்பட ஜெபிப்போம்
நாம் சுவிசேஷ ஊழியம் செய்யும்போது அனேக வேளைகளில் நாம் விதைக்கின்ற விதையானது சரியாய் பலன் கொடுப்பதில்லை. நாம் எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே முடிவது போல இருக்கலாம். நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு காரியம் - குருடாக்கப்பட்ட அவர்கள் கண்கள் திறக்கப்பட வேண்டும்.
அதற்காக நாம் ஜெபம் செய்வது அவசியமாக இருக்கிறது நாம் விதைப்பதற்கு முன்பாக அந்த நபருடைய கண்கள் சுவிசேஷத்தின் ஒளியைப் பார்க்கும் படி திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 26:18
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்
மனப்பாட வசனம்
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
ஜெபக்குறிப்புகள்
1. அவர்கள் கண்களை திறக்கும் படி
2. சுவிசேஷத்தின் ஒளி அவர்களை சந்திக்கும்படி
3. சத்தியத்தை அவர்கள் சரியாய் புரிந்து கொள்ள
4. கட்டப்பட்ட அவர்கள் கண்கள் திறக்கப்பட
5. தேவனுடைய ஒளி அவர்கள் இருளை வெளிச்சம் ஆக மாற்ற
6. அவர்கள் தேவன் இடத்திற்கு திரும்பும்படி
7. பாவமன்னிப்பை அவர்கள் பெற்றுக் கொள்ளும்படி
8. பரிசுத்த ஆக்கப்பட்டவர்களின் சுதந்திரத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளும்படி
9. அவர்கள் சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு தேவனிடத்தில் திரும்ப
10. இருளின் இடத்திலிருந்து அவர்கள் ஒளி இடத்தில் திரும்ப
Comments