ஆத்துமாக்களுக்காக ஜெபிக்க வேண்டும் - பிசாசின் பிடியில் இருந்து விடுதலை ஆக

ஆத்துமாக்களுக்காக ஜெபிக்க வேண்டும் - பிசாசின் பிடியில் இருந்து விடுதலை ஆக
நாம் ஆத்துமாக்களுக்காக ஜெபிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. இருளின் ஆதிக்கத்தில் இருக்கிறவர்களை வெளிச்சம் ஆகிய இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வரவழைப்பதற்கு நாம் ஜெபிக்க வேண்டும். ஆத்தும ஆதாய ஊழியம் என்பது ஒரு ஆவிக்குரிய யுத்தமாக இருக்கிறது.
ஆம் அவர்கள் பிசாசின் பிடியில் இருந்து விடுதலையாகும் படி அந்த நபருக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.
2 தீமோத்தேயு 2:26
பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
மனப்பாட வசனம்
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
ஜெபக்குறிப்புகள்
1. எல்லா கட்டுகளில் இருந்தும் அவர்கள் விடுதலை ஆக
2. இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று கொள்ள
3. ஒளியின் இடத்திற்கு அவர்கள் இழுக்கப்பட
4. எல்லா பிசாசின் இச்சையின் படி நடக்கிற காரியங்கள் மாற
5. பிசாசானவன் அவர்களுக்கு வைத்திருக்கிற எல்லா மயக்கமும் தெளியும்படி
6. அவர்கள் பிசாசின் கண்ணிக்கு தப்ப
7. சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கிற கிருபைக்காக
8. தொடர்ந்து இந்த ஆத்துமாக்களுக்காக ஜெபிக்க
9. அவர்கள் இருதயம் நல்ல நிலமாக மாற
10. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் அவர்களுக்கு உண்டாக
