தேவன் தம்மிடம் இழுத்துக் கொள்ளும்படி ஜெபிப்போம்தேவன் தம்மிடம் இழுத்துக் கொள்ளும்படி ஜெபிப்போம்


நாம் வேதத்தில் வாசிக்கிறோம் நாம் எவ்வளவு பிரயாசப் பட்டாலும் தேவன் ஒரு நபரை தம்மிடம் இழுத்துக் கொள்ளாவிட்டால் அந்த நபர் இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசத்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதனால் அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக நம்முடைய ஜெபம் முக்கியமானதாக இருக்கிறது.


தேவன் அந்த நபரை கிருபையாய் இருந்து தன்னிடம் சேர்த்துக் கொள்ளும்படி நாம் ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய கிருபை மற்றும் காருண்யத்தின் கரம் அந்த நபர் மீது கடந்து வருவதற்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். அந்த நபர் தீபனை தேடும் படியான சூழ்நிலை உண்டாக தக்கதாக நாம் ஜெபிக்க வேண்டும்


யோவான் 6:44


என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்

மனப்பாட வசனம்


யோவான் 16:24


இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.ஜெபக்குறிப்புகள்


1. தேவன் அவர்களை தம்மிடம் இழுத்துக் கொள்ள


2. தேவனுடைய கரம் அவர்கள் மீது இறங்கி வர


3. தேவனுடைய அன்பு அவர்கள் இழுத்துக் கொள்ள


4. கல்லான இதயம் உடைக்கப்பட


5. உணர்வுள்ள இருதயத்தை தேவன் அவர்களுக்கு தர


6. தேவனை தேடும் இருதயத்தை தேவன் அவர்களுக்கு தர


7. இயேசுவை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை அவர்களுக்கு உண்டாக


8. தேவன் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க


9. தேவனை அவர்கள் தகப்பனாய் ஏற்றுக் கொள்ள


10. அந்த ஆத்துமா இரட்சிக்கப்படH.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041