தேவன் சுவிசேஷதிற்கான வாசலை திறக்கும்படி ஜெபிப்போம்தேவன் சுவிசேஷ திற்கான வாசலை திறக்கும்படி ஜெபிப்போம்


ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட தேவன் சுவிசேஷத்திற்கான வாசல்களைத் திறக்க வேண்டும். அடைக்கப்பட்ட வாசல்களைத் திறக்க வல்லமை உள்ளவர் தேவன் ஒருவரே. தேவன் திறந்த வாசலை ஒரு மனுஷனும் பூட்டக் கூடாது. எனவே நாம் ஜெபிக்கும் நபருக்காக சுவிசேஷம் விதைக்கப்படுவதற்கான வாசலை திறக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும்.


சுவிசேஷ விதை விதைப்பதற்கான சூழ்நிலையை கர்த்தர் உண்டுபண்ணும் படியாக நாம் அவரை நோக்கி ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டும். தடைகள் யாவும் உடைக்கப் படும்படியாக ஜெபிக்கவேண்டும்.


கொலோசெயர் 4:4


திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்


 

மனப்பாட வசனம்


யோவான் 17:3


ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.


 

ஜெபக்குறிப்புகள்


1. அந்த நபர் மனம் திரும்பும் படி


2. விதைப்பதற்கான சூழ்நிலையை கர்த்தர் ஏற்படுத்த


3. உற்சாக மனதோடு நாம்.விதைக்க


4. சோர்ந்து போகாமல் அந்த நபருடைய இரட்சிப்புக்காக ஜெபிக்க


5. விதைக்கப்படும் விதை பலன் கொடுக்க


6. தடைகள் யாவையும் கர்த்தர் நீக்கி போடும்படி


7. அந்த நபரின் கண்கள் திறக்கப்பட


8. உணர்வுள்ள இருதயத்தை தேவன் அவர்களுக்கு தர


9. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


10. அந்த நபரின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாக26 views
hop church logo.jpg