இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக ஜெபிப்போம்இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக ஜெபிப்போம்நாம் சுவிசேஷமாகிய விதையை ஒரு நபருடைய இருதயத்தில் விதைக்கும்போது அது நிச்சயமாக தன் பலனைக் கொடுக்கும். அவர்கள் நம்பிக்கையோடு தேவனை நோக்கி செய்யும் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்ட ஆண்டவர் நிச்சயம் பதில் கொடுப்பார். அவர்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடைபெறும் பொழுது அவர்கள் விசுவாசமானது சரியான திசையை நோக்கி திருப்பப்படும் படி நாம் ஜெபிக்க வேண்டும்.


அனேக வேளைகளில் தேவன் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நன்மையை செய்யும் பொழுது அது தேவனுடைய கரத்தில் இருந்து வந்தது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் ஜெபிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆம் அந்த விசுவாசம் அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு ஏதுவாக மாறவேண்டும்.


அப்போஸ்தலர் 20:21


தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்


இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக ஜெபிப்போம்! அந்த ஆத்துமாவை தேவனுக்கென்று சம்பாதித்துக் கொள்வோம்!! 

மனப்பாட வசனம்


ரோமர் 10:9


என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்


 

ஜெபக்குறிப்புகள்


1. இருதய கடினங்கள் மாற


2. சூழ்நிலைகள் விதை விதைப்பதற்கு ஏதுவாக அமைய


3. விதைப்பதற்கு நாம் தேவன் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள


4. தேவன் குறித்த நேரத்தில் சரியாக விதைப்பதற்காக


5. அவர்கள் கண்கள் திறக்கப்பட


6. செவிகள் சுவிசேஷத்தை கவனிக்கிற செவிகளாக இருக்க


7. இரட்சிக்கப்படுவதற்கு இருக்கிற தடைகள் மாற


8. முழுமனதோடு அவர்கள் தேவனைத் தேட


9. கர்த்தரே தேவன் என்பதை அவர்கள் வாயினால் அறிக்கையிட


10. கர்த்தரே தேவன் என்பதே அவர்கள் இருதயத்தில் விசுவாசிக்க36 views
hop church logo.jpg