top of page

கிறிஸ்துவை அறிய இருக்கும் தடைகள் மாற



கிறிஸ்துவை அறிய இருக்கும் தடைகள் மாற



ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். அவர் பிறப்பின் நன்னாளை கொண்டாடுகிற இந்த நாளிலும் அவருக்காக ஆத்தும ஆதாயம் செய்வதிலும் பெரிய ஒரு பரிசை நம்மால் அவருக்கு கொடுக்க இயலாது. ஆத்தும ஆதாயம் செய்கிறவன் ஞானம் உள்ளவன் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


இந்த ஊழியத்தை செய்யும்போது எத்தனையோ தடைகளை நாம் சந்திக்க நேரிடலாம். நாம் செய்கிற ஊழியம் கனி உள்ளதாக இருக்க வேண்டுமென்றால் நாம் விதைக்கிற விதை பலன் கொடுக்கிறதாக இருக்கவேண்டுமென்றால் தடைகள் நீங்கும் படி நாம் ஜெபம் செய்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. நம்முடைய தேவன் தடைகளை நீக்குகிறவாராக இருக்கிறார்.


2 கொரிந்தியர் 10: 3-5


நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.


எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.


அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்



 

மனப்பாட வசனம்


எபேசியர் 2:8


கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;


 

ஜெபக்குறிப்புகள்


1. நாம் ஆவியிலே போர் செய்கிறவர்களாக காணப்பட


2. ஆவிக்குரிய யுத்தம் செய்ய


3. சர்வாயுதவர்க்கத்தை நாம் தரித்துக் கொள்ள


4. விதை வேரூன்ற உள்ள தடைகள் மாற


5. விதை நல்ல நிலத்தில் விழுந்த விதையாக பலன் கொடுக்க


6. பாரம்பரிய கட்டுகள் நீங்கும்படி ஜெபிப்போம்


7. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாகாத படி ஏற்படும் தடைகள் மாற


8. நாம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடாமல் இருக்க


9. கிறிஸ்துவை குறித்து தெளிவாக நம் சுவிசேஷம் சொல்ல அறிந்துகொள்ள


10. அந்த ஆத்துமா தேவனுக்கென்று சொந்தமாக தெரிந்து கொள்ளப்பட



33 views

Σχόλια


hop church logo.jpg
bottom of page