உறவின் அடிப்படையில் சுவிசேஷ ஊழியம் செய்ய ஜெபிப்போம்உறவின் அடிப்படையில் சுவிசேஷ ஊழியம் செய்ய ஜெபிப்போம்நம் ஆத்தும ஆதாய ஊழியம் செய்யும்போது அது நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து செய்யப்படுகிற ஊழியம் ஆக இருக்க வேண்டும். சில வேளைகளில் ஆத்துமாக்களுடைய இருதயத்தில் நம் சுவிசேஷ விதையை விதைக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி அனேக காரியங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


நாம் செய்கிற அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள சூழ்நிலைகளை கேட்டு அறிந்து அவர்களை விசாரித்து தேவனுடைய அன்பை அவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் தவறிவிடுகிறோம். உறவின் அடிப்படையில் நாம் செய்கிற தான ஊழியம் மிகுந்த பலனை கொண்டுவருவதாக இருக்கும். அன்புடன் ஆத்துமாக்களுக்கு விதை விதைப்போம் நிச்சயம் தேவன் ஏற்ற காலத்தில் வேலனை கொடுக்க உண்மை உள்ளவராக இருக்கிறார்.


1 கொரிந்தியர் 9:22

பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.மனப்பாட வசனம்


யோவான் 3:36


குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.ஜெபக்குறிப்புகள்


1. உண்மையான கரிசனையோடு ஊழியம் செய்ய


2. அன்போடு விதை விதைக்க


3. சகிப்புத் தன்மையோடு இந்த ஊழியத்தில் உற்சாகமாக ஈடுபட


4. இரட்சிப்பை காணும் வரை பொறுமையுடன் காத்திருக்க


5. அவர்களை விசாரிக்கிறவர்களாக நாம் காணப்பட


6. சோர்ந்து போகாமல் அவர்களுக்கு தொடர்ந்து ஊழியம் செய்ய


7. அவர்கள் உள்ளத்தில் தேவன் விசுவாசத்தை ஊற்ற


8. தேவ ஆவியானவர் அவர்கள் உள்ளத்தில் கிரியை செய்ய


9. அவர்கள் சூழ்நிலைகளில் தேவ அன்பை அவர்கள் ருசிக்க


10. அந்த ஆத்துமா தேவனுக்கு சொந்தமாக மாறH.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041