முழு சுவிசேஷம் அவர்களை சென்றடைய ஜெபிப்போம்முழு சுவிசேஷம் அவர்களை சென்றடைய ஜெபிப்போம்நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி பாரத்துடன் நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது நாம் இதை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆண்டவர் அற்புதர் அவர் சுகமாக்குகிறவர் அவர் தேவைகளை சந்திக்க அவர் என்பதையெல்லாம் நாம் அவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


ஆனால் நாம் செய்ய தவறுகிறது முழு சுவிசேஷத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் மறந்து விடுகிறோம். ஆம் அவராலே அன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை என்பதையும் அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து நமக்கு பாவமன்னிப்பு மீட்பை பெற்றிருக்கிறார் என்பதையும் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறதுஅப்போஸ்தலர் 4:12


அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்


சுவிசேஷத்தை முழுமையாக அறிவிப்போம்! ஆத்துமாக்களை சம்பாதித்துக் கொள்வோம்!!


மனப்பாட வசனம்


லூக்கா 1:37


தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.ஜெபக்குறிப்புகள்


1. சுவிசேஷத்தை சரியாக சொல்ல நமக்கு ஞானம் உண்டாகும் படி


2. பயமின்றி தைரியமாக சுவிசேஷத்தை சொல்ல


3. சுவிசேஷத்தை அறிவிக்க நாம் கற்றுக் கொள்ளும்படி


4. தேவையை முன்வைக்காமல் கர்த்தர் செய்த நன்மையை அவர்கள் முன் வைக்க


5. அவர்கள் அற்புதங்களுக்கு தேவைகளுக்காக தேவனை தேடாமல் இரட்சிப்பின் அனுபவத்திற்காக தேவனைத் தேட


6. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


7. அவர்களுடைய மன கண்கள் திறக்கப்பட


8. இருதயத்தின் கடினங்கள் மாறி விதையை ஏற்றுக் கொள்ள


9. நல்ல நிலமாக அவர்கள் இருதயம் ஆயத்தமாக்கப்பட


10. அவர்கள் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகH.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041