ஆத்துமாக்களுக்காக செலவு பண்ண பட ஆயத்தமா?
நாம் எவ்வளவாக மன்னிக்கப்பட்டு இருக்கிறோமோ அவ்வளவாக அன்பு கூற வேண்டும். தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே நம்மை சம்பாதித்திருக்கிறார். அவருக்காக நாம் என்ன செலுத்த முடியும்? நம் வாழ்நாள் முழுவதும் மனநிறைவோடு அவருக்காக பணி செய்வது நமக்கு கொடுக்கப்பட்ட பெரிய சிலாக்கியம்.
முழுமனதோடு ஊழியம் செய்ய நீங்கள் ஆயத்தமா? அவர் இதயத்துடிப்பை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமா? அழிந்து போகின்ற ஆத்துமாக்களை காக திறப்பின் வாயிலே நீங்கள் ஆயத்தமா?
2 கொரிந்தியர் 12:15
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்
மனப்பாட வசனம்
கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
1 பேதுரு 3:15
ஜெபக்குறிப்புகள்
1. சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்ற
2. நல்ல சீஷனாக வாழ்வை ஒப்புக்கொடுக்க
3. மன நிறைவுடன் ஊழியம் செய்ய
4. தேவ நாமத்தை மகிமைப்படுத்த
5. ஆத்தும பாரத்தோடு ஜெபிக்க
6. ஆத்தும பாரம் உண்டாக
7. சரியான நேரத்தில் விதை விதைக்க
8. எந்த சூழ்நிலையிலும் ஊழியம் செய்ய
9. மனக் கண்கள் திறக்கப்பட
10. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக
அழகான பாதங்கள்
Comentários