சுவிசேஷ ஊழியம் தேவனுடைய முதல் கரிசனை
மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து
தேவனுடைய முதல் கரிசனை அழிந்து போகிற ஆத்துமாக்கள் தான். காணாமல் போன ஆட்டை குறித்த கரிசனை மேய்ப்பன் ஆகிய தேவனுக்கு அதிகமாக உண்டு. அவர்களும் மந்தையில் சேர்க்கப்படும் வரை தேவன் அவர்களைக் குறித்த நினைவிலேயே இருக்கிறார்.
நீங்கள் எது குறித்து கரிசனையாக இருக்கிறீர்கள்? அழிந்து போகிற ஆத்துமாக்கள் உங்களுக்கு முக்கியமாக தோன்றுகிறார்களா? உங்களுடைய கரிசனையும் தேவனுடைய கரிசனை போலவே இருக்கட்டும்
மனப்பாட வசனம்
யோவான் 3:3.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஜெபக்குறிப்புகள்
சுவிசேஷம் தேவனுடைய முதல் கரிசனை
1. தேவனுடைய கரிசனை நம்முடைய கரிசனையாய் மாற
2. தேவனைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்கிற தாகம் அதிகரிக்க
3. தேவனைப் பற்றி சொல்லக் கூடிய சந்தர்ப்பங்கள் தினமும் நமக்கு கிடைக்க
4. எல்லா ஜாதிகளையும் சுவிசேஷம் சென்றடைய
5. இந்த தேசத்தின் ஜனங்கள் இயேசுவை காண
6. நம்மை சுற்றி இருக்கும் குடும்பங்களின் இரட்சிப்புக்காக
7. நம்முடைய நண்பர்கள் உறவினர்கள் இரட்சிக்கப்பட
8. அனு தினமும் நாம் சந்திக்கும் நபர்களில் இரட்சிப்புக்காக
9. பலவானை முந்தி கட்ட
10. நம்முடைய சூழ்நிலைகள் தேவைகளுக்கு முன்பாக கர்த்தருடைய கரிசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
Comments