சுவிசேஷ ஊழியம் தேவன் கொடுத்த கட்டளை
- HOP Church
- Nov 16, 2020
- 1 min read

சுவிசேஷ ஊழியம் தேவன் கொடுத்த கட்டளை
மாற்கு 16:15
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய நமக்கு ஒரு கட்டளையை கொடுத்திருக்கிறார். இது பிரதான கட்டளை. வேறு எந்த காரியத்தையும் நாம் செய்வதை தேவன் விரும்புவதை விட இதிலே கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். தீவினை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் அவர் கட்டளையை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. ஆம் தேவன் கொடுத்த கட்டளை என்ன?
உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவன் கூறுகிறார். இது நம்முடைய விருப்பம் அல்ல நாம் நிச்சயமாக செய்ய வேண்டிய ஒரு காரியம். அவருடைய பிள்ளைகள் என்று நாம் சொல்லுவோமாகில் அவர் கொடுத்த கட்டளையையும் நாம் நிறைவேற்ற வேண்டும் அல்லவா.
ஆம் ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய சுவிசேஷத்தை நற்செய்தியாய் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அழிந்து போகின்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இயேசுவின் அன்பைப் பற்றி சொல்லுவது தேவன் நமக்கு கொடுத்த கட்டளையாக இருக்கிறது. மற்ற எல்லாக் கட்டளைகளையும் நாம் நிறைவேற்றினாலும் ஆத்தும ஆதாயம் செய்யாமல் இருப்போம் என்றால் தேவன் அதிலே பிரியமாக இருப்பதில்லை. தேவ கட்டளைக்கு கீழ்ப்படிய தீர்மானம் எடுப்போம். தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்.
மனப்பாட வசனம்
ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ஜெபக்குறிப்புகள்
சுவிசேஷம் தேவனுடைய கட்டளை
1. தேவன் சொன்ன வார்த்தையை நாம் நிறைவேற்ற
2. கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க
3. தேவன் விரும்புகிறதை செய்ய நாம் ஒப்புக் கொடுக்க
4. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியும் இருதயத்திற்கு
5. இதை விரும்புகிறவர்கள் செய்வது அல்ல எல்லோரும் செய்ய வேண்டும் என்பதை உணர
6. தேவன் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்ந்து கொள்ளும்
7. தேவ தூதர்களை அல்ல நம்மை நம்பி ஒரு கட்டளையை தேவன் கொடுத்திருப்பதால் சுவிசேஷ ஊழியம் செய்ய
8. தினம் தவறாமல் தேவனைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல...
9. நண்பர்களுக்காக அவர்கள் ரட்சிக்கப்படும்படி தொடர்ந்து ஜெபிக்க
10. தேவ கட்டளைக்கு முழுமனதோடு ஒப்புக்கொடுக்க

コメント